“என்னைத் தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு உன்னைத் தேடி வாழ்வின் மொத்த அன்பைத் தருவேன் .. செல்லரிக்கும்” நான் செல்லை எடுத்தேன்..
“நான் தான் பேசறேன்.. எங்க இருக்கீங்க” – கொஞ்சலாய் கேட்டாள் ரேகா..
“வந்துட்டே இருக்கேன்.. நீ எங்க இருக்க.. “
“இன்னும் பத்து நிமிஷத்தில திருவான்மியூர் வந்திடுவேன்.. உங்களுக்கு வர எவ்ளோ நேரம் ஆகும்”
“உனக்கு முன்னாடி நான் அங்க இருப்பேன்..”
“சரி சீக்கிரம்.. “ கட் செய்தாள் ரேகா..
நான் போன் உள்ளே வைத்தபடி காரைக் கிளப்பினேன்.. குறைந்தது அரை மணி நேரமாகும் சேர..
“என்னைத் தேடி ..”..
“சொல்லு ரேகா”
“நான் சேர்ந்தாச்சு .. நீங்க”
“இதோ வந்துட்டே இருக்கேன்.. ஒரே டிராபிக் “
“என்னால ஒரு நிமிஷம் கூட காத்திட்டு இருக்க முடியல.. உங்களை இப்பவே பாக்கணும்.. உங்களுக்காக காலேஜ் ல இருந்து கட்டடிச்சிட்டு வரேன்.. தப்பிக்கறது எவ்வளவு கஷ்டம் தெரியும்ல”
“சரி சரி.. வந்துடறேன்.. ஆபீஸ்ல அட்டெண்டன்ஸ் போட்டுட்டு வரேன்”..
என்னோட பென்ஸ் சீறிக்கொண்டிருந்தது.. இன்னும் சோழிங்கநல்லூர் கூட சேரவில்லை..
“சரி அப்போ போன்ல பேசிட்டு இருக்கனும்”
“ம்.. பர்த்டே பேபிக்கு என்ன வேணும் “
“ஈ சி யார்-ல லாங்க் டிரைவ்.. அப்புறம் மாயாஜால்-ல மூவி.. அப்புறம் ..“
“அப்புறம் அப்படியே பாண்டிச்சேரி.. ஓகேயா”
“ஆசைத்தான் .. எனக்கு சீக்கிரம் வீட்டுக்கு போகணும்.. “
“அப்போ எனக்கு நீ பெரிய ட்ரீட் தரணும்.. “
“என் கிட்ட காசு இல்ல.. அப்பா காலைல நூறு தான் கொடுத்தார்.. என் கிளாஸ் பிசாசுங்க சாப்டாச்சு அதை”
“லூஸ் எனக்கு அந்த ட்ரீட் வேணாம்.. “
என் எண்ணம் புரிந்தவளாய் அவள் மூச்சுக்காற்று பலமாய் ஆனதை உணர்ந்தேன்..
“முதல்ல நீங்க வாங்களேன்.. “
“நான் கேக்குறதெல்லாம் தருவியா”.. வம்பிழுத்தேன்..
“கேக்கிறதுக்கு மேலயே தரேன் வாங்க.. “ நிச்சயம் அந்த குறும்பில் காதலை விட வேற ஒன்று அதிகமாக இருந்தது..
வேகமின்னும் கூட்டினேன்.. புது கார் என்பதால் ஸ்மூத்…..
“சொல்லு சொல்லு .. என்ன எல்லாம் தருவ” எனக்குள் உஷ்ணமேறிக் கொண்டிருந்தது..
காதலில் லயித்திருந்த எனக்கு அந்த லாரி தென்படவில்லை.. மிக அருகில் தான் ஒரு மஞ்சல் லாரி, யூ டர்ன் எடுத்தது..
100 மைல் வேகத்தில் வந்து கொண்டிருந்த எனக்கு இது எதிர்பாராமல் இருந்தது.. செல்லை வைத்த படியே கட்டுப்படுத்த முயன்றேன்
க்ரீரீச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச் – என்ற சத்தத்துடன் திருக்கிட்டு நின்றது என்னுடைய பென்ஸ். நல்ல வேளை லாரியோடு மோதவில்லை..
ஒரு கணவன் மனைவி வண்டியில் இருந்து வீழ்ந்ததை அப்போது தான் கவனித்தேன்.. சடாரென்று அமிலங்கள் சுரக்க எனக்கு வியர்க்க ஆரம்பித்தது..
கைகள் நடுங்க .. என்ன செய்வதென்று தெரியாமல் திணறினேன்.
வெறுமையா இருந்த ரோட்டில திடீர்னு கூட்டம் சேர ஆரம்பித்தது..
அந்த க்ரீச் சத்தமாத் தான் இருக்கனும்.. அது இன்னும் என் காதில ரீங்காரமிட்டுக்கிட்டே இருக்கு..
என்னோட இதயத் துடிப்பும் அதிக சத்தத்தோட அடித்தது..
விழுந்தவர்களை பார்க்க பயமா இருந்தது..
ஹலோ ஹலோ என்று சொல்லிக் கொண்டிருந்த ரேகாவை பொருட்படுத்தாமல் நான் விரைந்தேன்.. திடீரென்று எப்படி கூட்டம் சேர்ந்தது தெரியவில்லை..
“டே டே டேய்” என்று கத்திக்கொண்டே என்னை நோக்கி ஒருவன் வந்தான்..
என்னோட பென்ஸ்-க்கு இன்னும் பதிவு எண் வராதது திடீரென்று நினைவிற்கு வந்தது .. அப்போ யாராலயும் பிடிக்க முடியாது..
வேகம் வந்தவனாய் நான் காரை திருப்பினேன்.. ஓடி வந்தவன் ரொம்ப கிட்ட வந்துட்டான்.. இன்னும் 2 பேர் வந்தாங்க..
காரில் புறப்பட்டேன். அப்படியே வந்த வழியி திரும்பினேன்.. வேகம் தானா கூடியது. அவன் துரத்திக்கொண்டே வந்தான்.. என்னோட வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாம பாதியில் நின்னான்..
எனக்கு வியர்த்து கொண்டே இருந்தது.. பார்த்த வரைக்கும் அவர்கள் இருவரும் உயிரோடு இருந்தார்கள்.. ஆனா ரத்தம் தெறித்திருந்தது.. எனக்கு ரொம்ப நாள் கழிச்சு அழுகை வந்தது..
கொஞ்ச தூரம் போய், ஒரு ஓரத்தில் வண்டியை நிறுத்தினேன்.. கொஞ்சம் தண்ணீர் குடித்தேன்.. முகம் துடைத்தேன். வியர்வை வந்து கொண்டே இருந்தது ..
பலர் என்னை துரத்துவது போல் பிரமை இருந்தது.. ஆம்புலன்ஸா இல்லை போலீஸ் வண்டியா தெரியவில்லை..
தூரத்தில் கேட்டுக்கொண்டிருந்த சத்தம்.. கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு மிக அருகில் கேட்டது..
நான் காதைப் பொத்திக்கொண்டேன்.. சத்தம் போட்டு அழவும் பயமாக இருந்தது எனக்கு..
அந்த சத்தம் அடங்கியது.. அது ஆம்புலன்ஸ் தான்.. நிச்சயம் அது நான் செய்த கலவரத்திற்காக தான் இருக்கும்..
எனக்கு குற்ற உணர்ச்சி பெருகிக் கொண்டே இருந்தது..
மீண்டும் ஆபிஸ் சென்றேன்.. கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.. எனது அருகிலேயே இரண்டு பெண்ஸ் இருந்தது.. இனிமேல் கண்டு பிடிக்க முடியாது என்று தைரியம் வந்தது.. அப்படியே விசாரணைக்கு வந்தா.. நான் ஆபீஸ்ல தான் இருந்தேன்னு சமாளிக்கலாம்..
என் முகத்தையும் யாரும் பார்க்கவில்லை. எனக்கு இன்னும் நிம்மதியாக இருந்தது. காரில் இருந்து இறங்கி நான் லாபிக்கு சென்று அமர்ந்தேன்..
ரேகா…
நான் செல்லை எடுத்தேன்.. 20 மிஸ்ட் கால்.. அ
“நெஞ்சே நெஞ்சே நீ எங்கே” ..
“ஹலோ ஹலோ.. தீபக்.. தீபக்.. எங்க இருக்கீங்க.. உங்களுக்கு நான் பேசறது கேக்குதா.. ஹலோ ஹலோ” ஏற்கனவே அழுது முடித்திருக்கிறாள்
“ரேகா.. ஒரு சின்ன ஆக்சிடெண்ட்.. எனக்கு ஒன்னும் இல்லை.. பதட்ட படாதே.. இப்போ நான் ஆபிஸ்ல இருக்கேன்.. நான் சொல்றத பொறுமையா கேளு”
“என்னது ஆக்ஸிடெண்டா.. தீபக் ஆர் யூ ஆர்ரைட் .. ஐயோ என்ன ஆச்சு.. எனக்கு பயமா இருக்கு”
“எனக்கு ஒன்னும் ஆகலை சொல்றேன்ல.. ஒரு பைக் இடிச்சிட்டேன்.. என்ன ஆச்சு தெரியலை.. திரும்பி வந்துட்டேன்”
“உங்களுக்கு ஒன்னும் ஆகலைல அது போதும் எனக்கு”
“இல்லைமா ஒன்னும் ஆகலை.. இப்போ அந்த வழியா என்னால வர முடியாது.. நீ ஒரு ஆட்டோ இல்லை கால் டாக்ஸி வச்சி இங்க வந்திடு.. நாம கோவலம் வழியா போகலாம்.. “
“வேணாம் சகுணமே சரி இல்லை”
“அதெல்லாம் ஒன்னும் இல்லை.. நீ வா.. எனக்கும் உன்னோட அணைப்பு தேவைப்படுது.. நீ தான் இப்போ எனக்கு வலி நிவாரணி எல்லாமே “
“உனக்கு தானே என்னோட உயிரே. சரி வரேன்.. ஆனா என் கிட்ட காசு இல்லை. “
“அது பத்தி கவலைப்படாதே.. நீ கிட்ட வந்து கால் பண்ணு.. நான் வந்து தரேன்”
“ம்.. ‘” ரேகா துண்டித்தாள்..
நான் என்னோட இடத்திற்கு சென்று மெயில் எதாச்சும் வந்துச்சா பார்த்தேன்.. அசட்டு தனமா “accident in OMR” கூகுளிட்டேன்..
ஆயிரத்திற்கு மேல் பதில் வந்தது.. எல்லாம் பைக் கார் ஆக்ஸிடெண்டாக இருந்தது.. இன்று நடந்த இடம் கூட “Accident Prone Zone” ஆக அறிவித்து இருக்கிறார்கள்.. இதுவரை கவணித்ததில்லை..
அப்படியே நேரம் கழித்தது..
“என்னை தேடி”
“எங்க டா இருக்க புஜ்ஜு” நான் இயல்பு நிலைக்கு திரும்பிட்டேன்
“வாசல்ல இருக்கேன்.. சீக்கிரம் வாங்க”
கடகட வென சென்றேன்..
தேவதை போல இருந்தாள் ரேகா.. அவள் அழுதிருந்தது அவள் மை காட்டி கொடுத்தது.. என் கைகளை பற்றிக் கொண்டாள்.. என் புன்னகை பார்த்த பின்னர் தான் அவள் முகமும் மலர்ந்தது..
அதே கால் டாக்ஸியில் மாயாஜால் செல்லாம் என முடிவு செய்தோம்.. மீண்டும் எனது காரில் பயணிக்க மனம் தயாராக இல்லை..
இருந்த படத்திற்கு கடைசி சீட்டில் டிக்கெட் வாங்கினோம்.. அவள் பேசாமல் இருந்தால்..
“நான் பயந்துட்டேன் உங்களுக்கு என்ன ஆச்சோனு”
“அதைப்பத்தி இனிமே பேசாதே.. நீ கொடுக்க வேண்டிய கொடு”
இருளிலும் அவள் கன்னங்கள் சிவந்தது தெரிந்தது..
திரைப்படம் எங்களை தொந்தரவு செய்யாமல் ஓடிக்கொண்டிருந்தது..
நேரம் போனதே தெரியாமல் இடைவேளை வந்தது..
பசிக்குது என்று சேட்டையாக சொன்னாள் ரேகா..
“எல்லாமே உனக்கு தான்” – கண்ணடித்தேன்..
“பேசுகிறேன் பேசுகிறேன்.. உன் இதயம் பேசுகிறேன்” அவள் செல்லடித்தது..
“ஐயோ அண்ணா.. ஷ் ஷ் ஷ்.. “ என்று பாவித்தாள்..
இரண்டு கைகளிலும் பாப்கார்ன் வைத்திருந்ததால் நான் அவளுக்காக செல் பிடித்து காதில் வைத்தேன்..
“சொல்லு அண்ணா” – குழந்தை போல் பேசினாள் ..
அவள் காதருகே நானும் காது வைத்து கேட்டேன் எப்போதும்
போல..
“ரேகா.. உடனே வாடி.. அப்பா அம்மவை ஹாஸ்பிடல்ல சேர்த்து இருக்காங்க.. உனக்காக கோயில்ல அர்ச்சனை பண்ண போறப்போ எவனோ ஒரு கார்காரன் இடிச்சிட்டான்.. செலக்டிவ் ஹல்த் ஹாஸ்பிட்டல்.. சீக்கிரம் வா.. காசு இருக்கா உன்கிட்ட.. ரேகா ரேகா.. இருக்கியா “
ரேகா மயக்கத்தில் இருந்தாள்.. நான் ஓட்டமெடுக்க ஆரம்பித்தேன்..
keeeeeeeeeeep it uppppppppppppppppppp divya all the best to you
ReplyDeletekavithozhan
kavithozhan.blogspot.com
முடிவு எதிர்பார்த்ததுதான் என்றாலும் நன்றாகவே எழுதியிருக்கிறீர்கள். கொஞ்சம் வசனங்களில் கவனம் செலுத்தியிருந்தால் மேலும் நன்றாக இருந்திருக்கும்.
ReplyDeleteவாழ்த்துக்கள்
soooper!
ReplyDeleteமனிதனின் வேறு ஒரு முகத்தை அழகாக (?) சொல்லி இருக்கீங்க...
ReplyDeleteஉன் நடை அருமையா இருக்கு ... நிறைய எழுதுங்கள் வாழ்த்துக்கள்...திவ்யா
திவ்யா அவர்களே, முதலில் வாழ்த்துக்கள். கதையின் முடிவு யூகிக்க முடிந்தாலும், உரையாடலில் கதையை நகர்த்திய விதம் அற்புதம். நல்ல பதிவருக்கான அடையாளம் உங்கள் நடையில் தெரிகிறது. தொடரட்டும் உங்கள் எழுத்து.
ReplyDeleteநல்ல நடை..
ReplyDeleteதொடர்ந்து எழுதுங்கள்..
வாழ்துக்கள்..
realy nice pa end good......
ReplyDeleteஏய் உண்மையில் நன்றாக எழுதுகிறீர்கள். நான் ஒரு சிறுகதையை முழுதாய் படித்தேன் என்றாலே அது சூப்பர் கதை என்று அர்த்தம். உங்கள் கதையை முழுவதும் படித்தேன். தொடர்ந்து எழுதுங்கள்
ReplyDeleteஅடி சக்க..!கலக்கிப்புட்டீய...உங்க நடை...ம்ம்..ராஜ நடை தான் போங்க..! CONGRATS...
ReplyDeleteI didnt expect this ending... nalla iruku... keep writing ;)
ReplyDeleteGood writing...Keep it up...
ReplyDeleteமொபைல் ரிங் உவமை நல்லா இருக்கு .......
ReplyDelete