Saturday, August 15, 2009

என்ன இருக்குனு சுதந்திர தினம் கொண்டாடணும்

என்ன இருக்குனு சுதந்திர தினம் கொண்டாடணும் நான்..

ஒரு வாரத்துக்கு முன்னாடியில இருந்தே வர ஆரம்பித்து விட்டது சுதந்திர தின கொண்டாட்டங்கள். அலுவலகத்தில் பாரத விலாஸ் மதிய சாப்பாடு, நாட்டுப்பற்றை தெரிவிக்கும் உடைகள் அணியும் போட்டி, காலை கொடியேற்றல், வித வித கலர்களில் பல மின்னஞ்சல்கள், இந்தியாவின் புகழைப் பற்றி, இந்தியாவின் வெவ்வேறு கலாச்சாரங்களைப் பற்றி, முதல் சுதந்திர தினத்தின் புகைப்படங்கள், இப்படி இன்னும் எத்தனையோ.. அதோடு குறுந்தகவல்கள், டிவியில் சிறப்பு நிகழ்ச்சிகள், பள்ளிகளில் மார்ச் பாஸ்ட், இன்று மட்டும் விற்பனையாகும் தேசிய கொடிகள், எங்கு பார்த்தாலும் மூவர்ணத்தில் உடைகள், கொண்டாட்டங்கள்..

வழக்கமாக ஒரு கிராமத்திற்கு சென்று, அங்கு நடக்கும் விழாக்களில் கலந்து வருவது வழக்கம். இந்த முறை அப்படி ஏதும் நடக்கவில்லை. ஏதோ ஒரு வெற்றிடம் அதிகமாக இருந்தது. தேசிய கொடியைக் குத்திக் கொண்ட போதும் அத்தனை நாட்டுப்பற்று பொங்கவில்லை.

நிலவி வரும்
தொலைக்காட்சி .. / சினிமா.. / மீடியா
• “Z” தொலைக்காட்சியில் சுதந்திர தின விழாவிற்கு முந்தையை தினம் தேசப்பற்று பெருக்கெடுத்து பொங்க வைக்கும் படம்காதல் என்றால் என்னஎன்ற திரைப்படம் திரையிட்டார்கள்.. விஷ்வா, தியாவின் தேசப்பற்று புல்லரிக்க வைத்தது..

ஆனந்த விகடன் (19/8) இதழில் 40ம் பக்கம் சத்குரு வாசுதேவ் அவர்களின் தொடர் வெளியானது. அதற்கு முந்தைய பக்கத்தில், நனைந்து இருக்கும் ஒரு பெண்ணின் புகைப்படத்தை போட்டு அவர்கள் கொடுத்து இருக்கும் வாசகம் இது தான்.. “புறமுதுகு பார்ட்டியை கண்டுபிடிச்சீங்களா(அது வேற போட்டோ).. இப்போ அடுத்த சவால்.. நனைஞ்சிருந்தாலும் நான் செம ஹாட் நாட்டுக் கட்டைஎனும் இந்த பியர்ல் ப்யூட்டி யார்.. பத்த வைக்கிற பாருன்னு பார்க்க பக்கம்..47” .. அட இப்போ தான் கவனித்தேன்.. அடுத்த பக்கத்தில் இதை விட ஏகபோக கேள்வி..

நம்ம நிமீதா அக்காவின் திரைப்படமான இந்திர விழாவில் அவர் கொடுத்த தெய்வீக புகைப்படங்கள் எல்லாப் பெண்களையும் பெருமை படுத்தியது. இதில் வேறு அனைவரையும் மச்சான் என்று சொல்லி அவனையும் கேவலப்படுத்தறா.. காசி தியேட்டரில் வெளியிட்ட அந்த பெரிய பேனரில் போவோர் வருவோர் கவனம் சிதறியடிக்கப்பட்டது.. நிர்வாணப் புகைப்படத்தை விட கேவலமாக இருந்த அதை யாரோ பாவி கொடுத்த புகாரின் பெயரில் எடுத்து விட்டார்களாம் பாவம். அதே ஆனந்த விகடனில், நமீதாவின் புகைப்படத்திற்கு கீழே இருக்கும் ஒரு சின்ன கார்ட்டூன் கமெண்ட் ( க்ளோபல் வார்மிங்கிற்கு நீங்களும் ஒரு காரணம்.. ) – இது உங்களுக்கு புரியலைன்னா.. இந்த சமுதாயத்தை விட்டு நீங்க ரொம்ப தூரத்தில இருக்கீங்கனு அர்த்தம்..

• NDTV யின் சமீபத்திய சாதனைராக்கி சாவந்தின் சுயம்வரம்”.. இந்தி நிகழ்ச்சி.. கவலை படாதீங்க.. விரைவில் விஜய் டிவியும் அதை தொடர்ந்து கலைஞர் டிவியிலும் அது போல நிகழ்ச்சிகள் வரலாம். கரு இது தான். ஒரு பெண்ணின் சுயம்வரம் ரியாலிட்டி ஷோவாக நடைபெறும்.. போட்டியில் பங்கு பெறும் நேயர்களில் இருந்து ஒருவரை தேர்ந்தெடுத்து அவரை நேரடி ஒளிப்பரப்பில் மணந்து கொள்வார். ராக்கி சாவந்த்(rakhi sawant) தெரியாதவர்கள் கூகிலிட்டு அவரைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். இதில் மற்றுமொரு பெருமையான விஷயம்இவரை மணந்து கொள்ள விண்ணப்பங்கள் வந்த மொத்த எண்ணிக்கை இருபது ஆயிரம். இன்னும் சொல்றேன் கேட்டுக்கோங்க.. வடிகட்டிய போட்டியாளர்கள் சிலருடன் ஒருவருக்கு ஒரு நாள் வீதமாக ராக்கி டேட்டிங் (Dating) செல்வார். அப்படி செல்லும் போது முத்தமிடலாம், நடனமாடலாம், பரிசு கொடுக்கலாம். இதெல்லாம் பிடித்தால் அம்மணி அடுத்த ரவுண்டுக்கு அவரை செலக்ட் செய்வார். தரமான நிகழ்ச்சி என்பதால் எந்த படுக்கையறை காட்சிகளும் ஒளிப்பரப்பவில்லை என்று பலரும் வருந்துகிறார்கள்.

இதெல்லாம் பாக்குறப்போ நம்ம மெகா சீரியல் பரவாயில்லை தானேனு யோசிக்கறவங்கதயவு செய்து கவணிக்கவும். இரண்டு பெண்டாட்டி அல்லது புருஷன், ஜெயில் காட்சிகள், பழி வாங்கும் காட்சிகள், கொலை செய்யும் குரூர குணம் படைத்த ஒரு வில்லன் / வில்லி, தேமே என்று அழுவதற்காக ஒரு கதாப்பாத்திரம், பெண்டாட்டியை தவிர வேறு ஒருத்தியுடன் உறவோ அல்லது காதலோ இருக்கும் ஆண், கணவனையே சவால் செய்யும் பெண்கள் - - - இது எதுவுமே இல்லாத ஒரு மெகா சீரியல் ஒண்ணு சொல்ல முடியுதா பார்ப்போம்.. ஆனா சொல்லிக்கொள்வது மட்டும் குடும்ப பாங்கான நாடகமாம். எந்த குடும்பத்தில இப்படி எல்லாம் நடக்குதோ..

இதுக்கு மேல இல்லைன்னு நினைக்காதீங்க.. இன்னும் சொல்ல வேண்டியது நிறைய இருப்பதால், பின்னூட்டங்களில் தொடரலாம் இன்னும் இது போல ஏராளமான கருத்துக்களை..

சமுதாயம்..

தீவிரவாதம், வள்ளுவர் சிலை எழுப்பினதுனால தகராறு, மாநிலங்களுக்குள் தண்ணி தகராறு, மொழிக்காக தகராறு, சொந்தகாரங்களிக்குள்ள தகராறு, கட்சிகள் தகராறு, கட்சிகளுக்குள் பதவிக்கு தகராறு, அண்ணன் தம்பி சொத்து தகராறு, புருஷன் பொண்டாட்டி தகராறு, இந்த ஊர் சைனாவுக்கா, இந்தியாவுக்கா னு கூகுளோடு தகராறு, ஒரே அலுவலகத்தில் ப்ரொமோஷனுக்காக தகராறு, ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் தகராறுசொல்லிக்கிட்டே போகலாம்.. தகராறு மட்டும் தான் வரலாறில் இருக்க போகிறது..

எப்போதும் நிரம்பி வழியிம் டாஸ்மாக் கடைகளை நான் தினம் தினம் கடந்து தானே செல்கிறோம். காலியான டாஸ்மாக் கடைகளை காண்பதே அரிதாகத் தானே இருக்கிறது. அத்தனை வருமானம் ஈட்டுவதால் தானே சம்பள உயர்வு. ரிசஸ்ஷன் எல்லாம் டாஸ்மாக்கை தீண்ட முடியுமா?

காலை 9 மணியளவில் அரசு போக்குவரத்து பேருந்துகளில் பயணித்து உள்ளீர்களா.. 40 பேர் ஏற்றிச்செல்ல வேண்டிய பேருந்தில் 40 பேர் புட்போர்டில் மட்டும் தொங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.. நெரிசல் என்ற வார்த்தையை தவிர வேறு வார்த்தை இல்லை இதை விவரிக்க.

அந்த நெரிசலிலும் தன் காம இச்சைகளை தீர்த்து கொள்ளும் புழுக்களை 98 சதவிகித பெண்கள் சந்தித்து இருப்பார்கள். இதைப் பற்றிய கதையை படித்த பல பெண்கள் தனியாக என்னிடம் தாங்கள் சந்தித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள்.

சின்ன சின்ன தோல்விகளுக்கெல்லாம்ஐய்யோ எனக்கு செத்து போயிடலாம் போல இருக்கு”, “ஐய்யோ வீட்ட விட்டு எங்கயாச்சும் போயிடலாம்என்று அடிக்கடி சலித்து கொள்ளும் இளைஞர்களுக்கு என்ன தன்னம்பிக்கை கற்றுக் கொடுத்துள்ளது இந்த கல்வி / சமுதாயம்

கிரெடிட் கார்ட், சாடர்டே நைட் பார்ட்டி, சோஷியல் ட்ரிங்கிங், டேட்டிங், டிஜே, ட்ரீட்இப்படி புதுப்புது யுத்திகளில் சென்று கொண்டிருக்கும் நாகரீகம்.

களத்தில் சென்று வேலை செய்யாமல், இதுங்க உருப்படாது என்று வியாக்கானம் பேசும் என் போல் சிந்தனையாளர்கள்.

- சிந்தனை.. கேள்விழி (திவ்யா செந்தமிழ் செல்வன்

உங்கள் கருத்துக்களை பின்னூட்டங்களில் இடவும்

12 கருத்துக்கள்:

  1. gud one.

    - Kiri

    ReplyDelete
  2. பதிவு நல்லா இருக்கு.

    //ஆனந்த விகடன் (19/8) இதழில் 40ம் பக்கம் சத்குரு வாசுதேவ் அவர்களின் தொடர் வெளியானது. அதற்கு முந்தைய பக்கத்தில், நனைந்து இருக்கும் ஒரு பெண்ணின் புகைப்படத்தை போட்டு அவர்கள்//

    இந்த மாதிரி டைப் ஜர்னலிசம் எனக்குத் தெரிந்து ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்பப் பழசு.சர்குலேஷன்ஊத்திக்கொண்டதால்
    இந்த வாரத்திலிருந்து மாற்றம் கொண்டு வந்திருக்கிறார்கள்.இப்போது அது ஆனந்தவிகடகுமுதம்.

    ReplyDelete
  3. நல்ல எழுத்துநடை திவ்யா செந்தமிழ் செல்வன், வாழ்த்துக்கள்.

    //என்ன இருக்குனு சுதந்திர தினம் கொண்டாடணும்//

    இதைச் சொல்லும் கருத்து சுதந்திரம்.

    ReplyDelete
  4. நண்பர் பீர் அவர்களே!
    எதை வைத்து கருத்து சுதந்திரம் இருக்குன்னு சொல்லூதீங்க? அதெல்லாம் 1967 வரை இருந்தது. பொதுமக்கள் வரிப்பணத்திலிருந்து எப்படி நீங்கள் M.L.A களுக்கு வீட்டுமனை வழங்க முடிவு செய்யலாம்? என் கேட்டு ஒரு கடிதத்தை முதல்வருக்கு எழுதுங்கள். மறு நாளே போலீஸ் ஜீப்பும், ஆட்டொவும் வீடு தேடி வரும். சில நாட்கள் நீங்கள் மருத்துவமனையில் ஜாலியாக ரெஸ்ட் எடுக்கலாம் !

    ReplyDelete
  5. மனிதன் said...
    நண்பர் பீர் அவர்களே!
    எதை வைத்து கருத்து சுதந்திரம் இருக்குன்னு சொல்லூதீங்க? அதெல்லாம் 1967 வரை இருந்தது. பொதுமக்கள் வரிப்பணத்திலிருந்து எப்படி நீங்கள் M.L.A களுக்கு வீட்டுமனை வழங்க முடிவு செய்யலாம்? என் கேட்டு ஒரு கடிதத்தை முதல்வருக்கு எழுதுங்கள். மறு நாளே போலீஸ் ஜீப்பும், ஆட்டொவும் வீடு தேடி வரும். சில நாட்கள் நீங்கள் மருத்துவமனையில் ஜாலியாக ரெஸ்ட் எடுக்கலாம் !

    nice... :)

    ReplyDelete
  6. உங்களின் கருத்தை வழிமொழிகிறேன். வணிகமயமாக்கப்பட்ட சூழலில், சுதந்திர தினத்தையும் கூட ஏதேனும் கார்ப்பரேட் நிறுவனம் ஸ்பான்ஸர் செய்ய முன்வரலாம். அதையும் இந்த தொ(ல்)லைக்காட்சிகள் ஒளிபரப்பு செய்யலாம். அதையும் நாம் பார்த்து தொலைக்கலாம்.

    ReplyDelete
  7. அருமை, நம் சமூக மக்களுக்கு நிஜங்கள் எப்போதுமே சுடும்.உங்களின் இந்த பதிவு சமகால நிஜங்களை வெளிப்படுத்தியது. உங்களின் இந்த பதிவுக்கும் எதிர் பினூட்டம் போடுபவர்கள் நிஜங்களையும்,உண்மைகளையும் வெளிக்காட்டிக் கொள்ளாத
    பயந்தாங்கொள்ளிகள்.உங்களின் துணிச்சலையும் அழகான எழுத்து நடையையும் வரவேற்கிறேன்.

    ReplyDelete
  8. கேவலமாக இருந்த அதை யாரோ பாவி கொடுத்த புகாரின் பெயரில் எடுத்து விட்டார்களாம் பாவம்//

    இது போன்ற நமிதாவின் இறையான்மைக்கு குந்தகும் விளைவிக்கும் செயல்களுக்கு ஏதேனும் NSA உண்டா ? ( நமீதா செக்யுரிட்டி ஆக்ட்)

    ReplyDelete
  9. நமீதாவின் மச்சான்ஸ் யாரச்சும் தட்டி கேக்கலாம்.. இல்லைனா மானாட மயிலாட டீம்-ல யாரையாச்சும் கேக்க சொல்லலாம்..

    ReplyDelete
  10. இருக்கட்டுமே! சுதந்திரநாள் தொடர்பா மத்தவங்க ஏதாவது செய்தாதான் நீங்க கொண்டடுவீங்களா? நீங்களும் இந்தியப் பிரஜைதானே, உங்களுக்கும் பொறுப்பு இருக்குல்ல! உங்க தெருவுல கொடியேதுங்க! உங்க நண்பர்களுக்கு வாழ்த்து அனுப்புங்க! உங்க வீட்லயிருக்கறவங்களுக்கு கொடி வாங்கி கொடுத்து சட்டையிலயோ சுடிதார்லயோ அணியச்செய்யுங்க! உங்களுக்கு தெரிஞ்ச குழந்தைகள்கிட்ட உங்களுக்கு தெரிஞ்ச இந்திய சுதந்திர போர் பத்தி சொல்லுங்க! உங்களுக்கு இவ்வளவு வேலைகள வச்சுகிட்டு ஊருல இருக்கறவனையெல்லாம் குத்தஞ்சொல்லி என்ன பயன்! இப்பவே இப்படின்னா, சுதந்திரம்னு சொன்னாலே உயிர் போயிடும்கற நிலைலயிருந்து துணிஞ்சு போராடி, காட்டிக்கொடுக்கறவன், குறை சொல்றவன், எல்லாத்தையும் அலுத்துக்கறவனெல்லாம் வச்சுகிட்டுதான் ஏறக்குறைய பல்வேறு தோல்விகள், சறுக்கல்கள் மற்றும் உயிர் இழப்புகளுக்கு மத்தியில் பல நூறு ஆண்டுகள் போராடி சுதந்திரம் வாங்கி கொடுத்துருக்காங்க! அவங்க நினைவா விரதம் இருக்க வேண்டாம், தீக்குளிக்க வேண்டாம்! கொண்டாடத்தானே சொன்னாங்க! நீங்க அவ்வளவு உயர்வான விஷயத்த இந்த ஸ்வைன் ஃப்ளு அனிமல்ஸ்கூட ஒப்பிட்டு வருத்தப் படறீங்களே! இந்தியா நமது நாடு! நாம் அனுபவிப்பது பல்லாயிரம் பேர் ரத்தம் சிந்தி, உயிரைக் கொடுத்து வாங்கி கொடுத்த அற்புதம்! கொண்டாட வேண்டியது நமது கடமை மட்டுமில்லை, உரிமையும் கூட!!

    ReplyDelete
  11. nalla pathivu.

    Most of us are celeberate a holiday.Dat day is and independence day is just an after thought.Dats wat is happening.Very few ppl like you are expressing their anguish.

    ReplyDelete
  12. Hi Divya, neenggal Indiavai vaithu eluthiyulleergal. irunthum Malaysiavilum ithemathirithaan poikittu irukku kathai. Athanaala ithai ennal rasikavum sinthikkavum mudiyuthu. nandri.

    ReplyDelete