டாலஸ் வந்த இரண்டாவது வாரம். அசல் படம் இங்க வெளியிட்டதால் சரி போகலாம் என்று முடிவு செய்தோம். இர்விங் என்ற இடத்தில் தியேட்டர் இருந்ததால் கிட்ட தட்ட 20 மைல் பயணம் செய்து தியேட்டர் சென்று அடைந்தோம். பெரிய தியேட்டர் முக்கால்வாசி காலியா தான் இருக்கு. படம் ஆரம்பிக்க பத்து நிமிடம் இருந்ததால் வழக்கமாக பேசுவது போல் படத்தோட ரெவ்யூ பத்தி பேசிட்டிருந்தோம். பில்லா மாதிரி இருக்காம், சமீரா ரெட்டி சில இடத்துல அழகா இல்லை, துக்கடா ஹீரோங்க எல்லாம் படம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே கொஞ்சம் தெளிவா தான் இருந்தோம்.
கதை..
இதை தாங்கிக்கற சக்தி உங்களுக்கு இருக்கானு எனக்குப்தெரியாது ஆனா முதல்லயே சொல்லிடறேன். படத்துல கதைன்னு ஒன்னுமில்ல. இடைவேளை விட்டப்போ பின்னாடி இருந்து ஒருத்தர் கத்தறார் – டே கதைய எப்படா சொல்ல போறீங்க.. பாவம் அவர் எதிர்பாக்கறது கிடைக்காதுனு அவருக்கு தெரியலை.
இல்ல இல்ல.. உண்மையில ஒரு கதை இருக்கு. அதை நான் சொல்ல மாட்டேன். உங்களுக்கு தைரியம் இருந்தா நீங்களே பாருங்க.. வேணும்னா க்ளூ தரேன். பணக்கார அப்பா, 2 சொந்த மகன்கள், தகாத உறவில் பிறந்த இன்னொரு மகன். சொந்த மகன்கள் தவறு செய்கின்றனர். வக்கீல் வர சொல்றார். சொந்த மகன்கள் கடைசியா ரூம் விட்டு போறாங்க. அடுத்த நாள் செத்து போயிடறார். இனிமே சுடோக்கு போட தெரிஞ்சவங்க மீதி கதையை யோசிக்கலாம். அதை விட இது ஈசி.
பாடல்கள்..
இப்படி ஒரு படத்துக்கு ஏதுவான பாடல்கள். ஒவ்வொரு பாடலும் அப்படியே கதையோட்டத்துக்கு பின்னி பிணைந்து பிடலெடுக்குது.
Ø இந்திய முக்கிய பிரமுகர் ஒருத்தரை கடத்தி சென்று ஒரு கும்பல் பணம் கேட்கிறது. ப்ரான்ஸ் நாட்டின் ஒரு முக்கிய பொறுப்பில் இருக்கும் சமீரா அப்பா அஜீத்தை நாடுகிறார். அவரை காசு கொடுக்காம மீட்க அப்பா அஜித், பையன் அஜித்தை அனுப்பி இருக்கார். வழக்கம் போல எவ்வளவு பயில்வான்களையும் கண் இமைக்கும் நேரத்தில் அடித்து எரிந்து விட்டு, பணப்பையுடன் பிரமுகரையும் கூட்டி வருகிறார் அஜித். ஆனால் வில்லன்கள் விடாமல் துரத்தி வருகின்றனர். திடீரென்று பிக்கினி போட்டு மூனு பேர் டான்ஸ் ஆடராங்க. பாத்தா சமீராவும் ஆடரா. ஐடம் கேள் மாதிரி இருக்காளே, ஒருவேளை இரட்டை வேடமோனு பாத்தா அவளே தான் அது. தல போல வருமா – னு எப்படியோ நுழைச்சிட்டாங்க. நம்ம காதுல “தலை போனா வருமான்னு” அப்பவே வார்னிங் குடுத்து இருக்காங்க. நான் தான் கவணிக்கலை.
Ø அப்பா அஜித், படுக்கையில் பார்ந்து விட்டு, சின்ன அஜித் வீட்டிற்கு செல்கிறார். “சிங்கம் தான் எங்க அப்பா” என்று பீலிங்க்ஸ் கொட்டி பாடல் வருது. ஒரு கனம் இது சரன் படமா சேரன் படமானு குழப்பமா இருக்கு. ஆனால் பாடல் தனியாக கேட்டால் நல்லா இருக்கும்.
Ø சமீரா – அஜித் முதல் டூயட். அஜித் அண்ணன் ராஜீவ் கிருஷ்ணா ஒரு கொடூரமான வில்லன் கிட்ட மாட்டிட்டு இருக்கான். அவனை மீட்க அஜித்தும் சமீராவும் இந்தியா வராங்க. சமீரா அஜித்திடம், “இவ்வளவு வருஷத்துல நாம இப்போ தான் தனியா வந்திருக்கோம், நான் நிறைய பேசனும் என பீலிங் விட, அஜித் “பொறுமையா பேசலாம்” என்று பியர் ஹக் தருகிறார். உடனே சமீரா அஜித் பாடல். என்னடா இது இந்த நெருக்கடில பாட்டு வேணுமான்னு யோசிக்கறவங்க, ப்ளீஸ் – சிட்டிசன் படத்துல சிக்கி முக்கு பாடல் பார்க்கவும். பாரிஸ்ல இருந்துகிட்டு ஒரு பியர் ஹக்- கு இவ்வளவு பீல் பண்ற சமீராவை ஆச்சர்யமா பாக்கறேன்..
Ø பாவனா – அஜித் முதல் டூயட் – படத்துல் எல்லாருமே ரசித்த பாடல் இது ஒன்னு தான். காதலர் தினத்தின் போது எதேச்சையாக சந்திக்கும் அஜித் – பாவணா வை எதிர்ப்பு கும்பல் சுற்றி வளைக்க அஜித்தை பொட்டு வைக்க சொல்கிறார்கள். பாவணா அஜித் கையை பிடித்து பொட்டு வைத்து கொள்கிறார். எதிர்பார்த்தது போல், உடனே பாடல். சிறப்பம்சன் – டொட்டொடைன். பாட்டு கேட்டு பாருங்க. என்னால இதுக்கு மேல சொல்ல முடியாது. அஜித் – உங்களுக்கு என்ன ஆச்சு L
Ø பாவணா – அஜித் இரண்டாம் டூயட். பரத் – தமண்ணா ஏற்கனவே Jab We Met கொன்னுட்டாங்க. இவங்க அதுல வர அருமையான பாட்டையும், பார்த்த நியாபகம் இல்லையோ பாட்டோட சேர்த்து கொலை பண்ணியிருக்காங்க. என்னமோ அழகா ட்ரை பண்ணி இருக்கறதா நினைப்பு வேற..
நடிகர்கள் – கதாப்பாத்திரம்..
அப்பா அஜித்துக்கு அதிகம் வேலை இல்லை.
பையன் அஜித்துக்கு பில்டப் என்னன்னா – Power of Silence. எல்லாமே அமைதியா இருந்து சாதிப்பாராம். எங்க போனாலும் எப்படி யார் இருந்தாலும் இவர் தனி ஆளா நின்னு அடிச்சு திம்சம் பண்ணுவாராம். சிகார் விளம்பரத்திற்கு மொத்த குத்தகை எடுத்திருக்கிறார்.
சமீரா ரெட்டி – பெரிய பதவில இருந்தாலும், கிளப் டான்சர் ஆகிறாள், அஜித் ஒரு பொட்டு பாவணாக்கு வைத்ததால், அவனுக்கு எதிராக சதி செய்கிறாள். அதிகம் வேலை இல்லை.
பாவணா – அழகாய் சித்தரிக்க நினைத்து, எரிச்சலை வரவழைக்கும் கதாப்பாத்திரம். எல்லாத்துக்கும் அப்பா பேரை சொல்லி, புத்தகத்தை பார்த்து வாழ்பவள். எப்ப தான் இந்த மாதிரி நாடகத்தனமான கதாப்பாத்திரங்கள் உருவாக்குவது நிறுத்துவார்களோ..
சம்பத், ராஜீவ், சுரேஷ் – யூகி சேது தவிர காமெடியன்கள் இல்லை என்று கவலை வேண்டாம். இவங்க செய்வது எல்லாமே சிரிப்பாக இருக்கிறது. முக்கியமாக சுரேஷின் நான் ப்ரெஞ்ச் போலீஸ். சத்தியமா இப்படி ஒரு காப் இருந்த அந்த நகரமே காலி. சம்பத், சரோஜாவில் அவ்வளவு கம்பீரமாக இருந்தார். இதில் அப்படி வலுவாக இல்லை. ராஜீவ்வும் எரிச்சலூட்டுகிறார். அவன் இறக்கும் முன் அவனும் அஜித்தும் பேசி கொள்ளும் வசனங்கள், மிகவும் எரிச்சலடைய வைத்தது.
யூகி சேது – சார். நீங்க தான் அருமையா சினிமா விமர்சனம் செஞ்சிட்டு இருந்தீங்களே அப்புறம் எதுக்கு இந்த பொழப்பு. அது நல்லா செய்யறீங்க. அதையே செய்யுங்க. கொஞ்சம் கொஞ்சம் வடிவேலுவை காப்பி அடித்து, காமெடி அடிப்பதாக நினைத்து இவரும் தேவையில்லாத ஒரு கதாப்பாத்திரம் தான்.
படத்தில் பிடித்தது..
Ø இடைவேளையின் போது குடித்த பெப்சி, இதமாக இருந்தது.
Ø ஒரு ஒரு லாஜிக் மீறல்களிலும் மக்கள் கைதட்டி உற்சாக படுத்தியது. உதாரணம் அஜித் அணிந்த சைனா டிரஸ்
Ø டொண்டொடொய்ன் – என்று வரும் போது ஆடும் நடனம்.
Ø தலைவலி மிகவும் பிடித்தது. 3 மணி நேரம் மொக்கை போட்டு தான் அந்த படத்தை மறக்க முடிந்தது.
கடைசியாக சில வரிகள்..
சரன் சார், காதல் மன்னன் இன்று வரை எனக்கு பிடித்த படங்களில் ஒன்று. அந்த இமேஜை அழிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
அசல் - - - இதுக்கு ரீமேக்கே பரவால்லை. Please Leave Comment or Vote
ஓ.கே. படம் ஒன்னொரு வேட்டைக்காரன் என்று பெருமையோடு பேசிக் கொள்கிறார்கள். நீங்கள் இப்படி எழுதி இருக்கிறீர்கள்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete//அசல் - - - இதுக்கு ரீமேக்கே பரவால்லை.//
ReplyDelete:-) nice
யூ டூ தல
ReplyDeleteதல இது நியாயமா?
commenting is the easiest thing in our life
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete@Suresh - Vettaikaran pakara mana thairiyam enaku illainga.. After Vijay disappointing in so many movies, I stopped watching his films. I wasnt expecting so much from Asal but still this is definitely disappointing.
ReplyDelete@Goutham,
ReplyDeleteIf commenting is the easiest thing in life, I could have written just one word saying the film is not good.
It took almost 3 hours for me to write this review. Well it is not only enough to write and appreciate good movies but also critisize bad movies. If you think I just comment or complain please see my previous post.
திவ்யா.. நல்ல விமர்சனம்..
ReplyDeleteகேபிள் சங்கர்