எப்படி ஆரம்பித்தது..
எங்கள் நண்பர்கள் குழுவில் இருக்கும் ஒருத்தியால் தான் தொற்றிக்கொண்டது இந்த ஜுரம். அவள் சில நாட்களுக்கு தினமும் ஒரு டிராமா கதை சொல்ல ஆரம்பித்தாள். அந்த கதையை விட அவள் அதை சொன்ன ஆர்வம் தான் ஆச்சர்ய பட வைத்தது. பிறகு ஒரு நாள் அவளது Pen Drive –ல் சில படங்களை கொடுத்து பார்க்க சொன்னாள். அன்று முதல் அதை தாண்டி வேறு படங்களோ நாடகமோ பார்க்கும் ஆர்வம் அதிகமாக இல்லை.
சின்ன விளக்கம்..
இந்திய திரையுலகிலேயே சிறந்த இயக்குனர்கள் மலையாள திரையுலகில் இருக்கிறார்கள். ஆனால் மலையாள படமென்றாலே ஷகிலா படம் என்ற கணிப்பு பலருக்கும் இருப்பது போல தான் கொரியன் திரையுலகையும் பலரும் தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்னர் ஒரு கொரியன் காலேஜில் படிக்கும் சில மாணவர்களின் குழும புகைப்படத்தை அனுப்பி, இதில் யார் சிரிக்கிறான், யார் அழுகிறான், யார் தூங்குகிறான் என்று கண்டிபிடித்தால் நீங்கள் கெட்டிகாரர் என்ற மின்னஞ்சல் வந்த்து. அதில் வேறு, இதை நீங்கள் ரசித்தால் மற்றவர்களுக்கும் அனுப்பி மகிழ வையுங்கள் என்ற பின் குறிப்பு வேறு.
சப்பை முக்கன் என்று நாம ஒரு இடத்துல ஏளனம் செய்து கொண்டிருக்கும் போது, நம்ம புகைப்படத்தை பார்த்து வேற எங்கேயோ சிரித்து கொண்டிருப்பார்கள் என்பதை மறக்க கூடாது.
இது வரை பார்த்த ஒரு சில படங்களிலேயும் நாடகங்களிலேயுமே இவர்கள் ஒரு பெரிய மலைப்பை ஏற்படுத்தி விட்டார்கள். சரி என்று இதைப் பற்றி இன்னும் ஆராய்ந்து பார்த்தால் எத்தனை நேர்த்தி எத்தனை தளங்கள்..
உண்மையில் ஆச்சர்யமாகத் தான் இருக்கிறது. இதில் நான் பார்த்த என்னை கவர்ந்த சில திரைப்படங்களை பற்றி விவரிக்கிறேன்.
கோர்மட் (Gourmet)
சுட சுட நேற்று தான் பார்த்து முடித்த தொடர். நாடகமென்றாலே என்னமோ ஏளனமாக இருக்கிறது. இந்த நாடகத்தை பார்த்த பின்னர் அந்த பிம்பம் முற்றிலும் உடைந்தது. கிட்டதட்ட 2 ஆண்டுகள் கொரியா முழுவதும் பயணம் செய்து, ஆராய்ச்சி செய்த பின்னரே இந்த நாடகம் தயாரித்துள்ளார்கள்.
கதை..
உன் அம் ஜங் என்பது சியோலில் இருக்கும் மிக பிரம்மாண்டமான ஒரு ஹோட்டல். பல காலங்களுக்கு முன்னர் அரசனிடம் பணியாற்றிய ஒரு ராயல் செப் (Royal Chef) கலையை தலைமுறை தலைமுறையாக தாங்கி வருகிறது. இதன் பொறுப்பாளியாக இப்போது இருப்பவர் 80 வயது மிக்க மாஸ்டர் ஓ. இவருக்கு இரண்டு மகன்கள். சொந்த மகன் புங் ஜூ, வளர்ப்பு மகன் சுங் சான் (நம்ம ஹீரோ கிம் ரே வான் நடிச்சு இருக்கார்).
சுங் சான் மிகவும் கவலையற்ற ஒரு இளைஞனா இருக்கான். புங் ஜூ 15 வயது முதல் சமையலே வாழ்க்கையாக வாழ்ந்து கொண்டிருக்கிறான். தனது தந்ததையின் மேனேஜரான ஜூ ஹீ யை ஒரு தலையாக காதலித்து கொண்டிருக்கிறார்.
ஓவின் அடுத்த வாரிசாக நினைத்து கொண்டிருக்கும் புங் ஜூ விற்கு ஒரு பெரிய இடி காத்து கொண்டிருக்கிறது. மூன்று சுற்றுகள் கொண்ட ஒரு போட்டியை நடத்தி அதில் யார் வெல்கிறார்களோ அவர்களே தனது அடுத்த வாரிசு என அறிவிக்கிறார் ஓ. இதில் புங் ஜூ, சுங் சான் மற்றும் வில்லனான மின் ஹூ கலந்து கொள்கின்றனர்.
அங்கிருந்து கலை கட்டுகிறது. ஒவ்வொரு சுற்றும் சுவாரஸ்யமாக இருக்கிறது. முதல் சுற்றில் சுங் சானும், இரண்டாம் சுற்றில் புங் ஜூ வும் வெல்கின்றனர். மூன்றாம் சுற்றில் யார் வெல்ல போகிறார்கள் என்று தவித்து கொண்டிருக்கும் போது ஒரு உண்மை தெரிய வருகிறது. ஓ – உண்மையில் அந்த ராயல் செப்பை சேர்ந்தவரில்லை. அவருக்கு துணையாக இருந்தவரின் பேரன் தான் ஓ. சுங் சான் தான் உண்மையான பேரன். அவன் தான் அடுத்த தலைமுறையை நடத்த வேண்டும் என்று விருப்பப்படுகிறார். இதை ஒட்டு கேட்கும் புங் ஜூ விற்கு கோபம் தலைக்கேறுகிறது. தனது இத்தனை கால உழைப்பிற்கு வருமா என்று கொதித்து சுங் சானை திட்டி போட்டியிலிருந்து விலக சொல்கிறான். உண்மையை தெரிந்து கொண்ட சுங் சான் யாருக்கும் சொல்லாமல் எங்கேயோ சென்று விடுகிறான். பல தரப்பட்ட மக்களை சந்திப்பதால் அவன் பக்குவப்படுகிறான். எல்லாரையும் நேசித்தாலும் அவனது அண்ணாவின் புங் ஜூ விற்கு மட்டும் அவனை பிடிக்கவில்லை.
அதன் பின்னர் இவர்களின் உறவுகளின் குழப்பங்களினால் உன் அம் ஜங்கிற்கு பெரிய ஆபத்து வருகிறது. அதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது தான் மிச்ச கதை. சுக் சாங்கிற்கு உதவி செய்ய வந்து காதலில் விழுகிறாள் ஜின் சூ – கதாநாயகி..
முக்கிய கதாப்பாத்திரம் கொரியன் உணவு வகைகள் தான். கண்டிப்பாக மாமிசம் சாப்பிடுபவர்களுக்கு எச்சில் ஊறும். உணவு மட்டும் இல்லாமல் அதை சார்ந்து வரும் மனித உணர்வுகள் அழகாக நளினமாக எடுத்து உள்ளார்கள்.
உதாரணத்திற்கு, புளி சாதம் என்றாலே எங்க பெரியம்மா தான் நினைவிற்கு வரும். எவ்வளவு ருசியாக சாப்பிட்டாலும் அதோடு சம்மந்தப்படுத்தி சாப்பிடுவதுண்டு. எப்படி எத்தனையோ சொல்லலாம்.
நடிகர்கள் – நடிப்பு..
இந்த தொடரை பார்ப்பதற்கு முதல் காரணம் கிம் ரே வான் (சுங் சான்) . மனதை கொள்ளை அடிக்கும் கதாப்பாத்திரம். துறு துறு, பொறுப்பற்ற இளைஞன் தன் திறமையை பற்றி தெரியாமல் சுற்றி வருகையிலும் சரி, தான் சந்திக்கும் மனிதர்களின் உறவுகள் புரிந்து கொண்டு அவர்களோடு தொர்ட்பு கொள்ளும் போது சரி… மின்னுகிறார். வைரம் வைரம் வைரம்..
முதலில் எரிச்சலடைய செய்தாலும் சில நேரத்தில் மனதில் வந்து அமர்ந்து கொள்கிறார் நம் சங் மி.
புங் ஜூ விற்கு கொஞ்சம் வில்லன் கதாப்பாத்திரம். தனது உழைப்பு வீணாக போகிறதென்ற வருத்தத்தில் வேறு விதமாக நடந்து கொள்கிறார். பாவமாக இருக்கிறது. ஆனால் கோபமும் வருகிறது.
ஜூ ஹீ – இரண்டாம் கதாநாயகிக்கு அதிகம் வேலை இல்லை. எப்போதும் சிரித்து கொண்டே இருப்பது தான் வேலை. ஆனால் சிறப்பான நடிப்பு.
மாஸ்டர் ஓ.. நடித்தது போலவே தெரியவில்லை. அத்தனை கச்சிதம். அவரை மிகவும் பிடித்து இருக்கிறது.
பல கணங்களில் கண்ணீர் ததும்புகிறது. புல்லரிக்கிறது..
அதில் சில..
1) ஓ இறந்த பின்னர் சுங் சானின் நடிப்பு
2) ஓ வும் அவனது பால்ய கால காதலியும் தழுவும் காட்சி
3) கங் ( பட்சர்) அவரது மகள் வந்து திருமணத்திற்கு அனுமதி கேட்கும் காட்சி
4) சுக் டோங் (சுக் சாங்கின் துணை) – வாண்டூ வில் அலபோன் எடுக்கும் காட்சிகள்
இன்னும் எத்தனை எத்தனை காட்சிகள்.. சுத்த சைவமாக இருப்பவர்கள் தவிர்த்து கொள்ளலாம். ஏன்னா எல்லாமே அசைவ உணவு தான். கொரியம் கலாச்சாரம் பற்றியும் நன்றாக தெரிந்து கொள்ளலாம்.
உங்களுக்காக சில தளங்கள்..
http://www.dramabeans.com/2008/07/gourmet-sbs/
http://wiki.d-addicts.com/Gourmet
http://www.mysoju.com/gourmet/
http://www.koreandrama.org/?p=568
http://www.soompi.com/forums/index.php?showtopic=86718
MegaUpload links :
http://bonchu.net46.net/gourmet/#more-௨௪
இன்னும் தொடரும்.. வேறு கதைகளோடு ...


translator needed :)
ReplyDeleteஅருமை
ReplyDeleteதொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
oh my god...great coincidence...I just watched a KBS drama " he who can't marry" back to back...am still in the fever...aren't they so addictive? I got addicted with the "pure in heart" long back....
ReplyDelete